Friday, 20 January 2012

உறவுகளுக்கு............

      "உன் பெயர் பாறை இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையை கட்டுவேன்"

   நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றிகொள்ளா.  மத்தேயு:16-18

 இராயப்பர் எனும் சாதாரன மனிதரின் மேல் இறைமகன் இயேசு கட்டிய கத்தோலிக்க திருச்சபை இன்று வானளவு பரந்து விரிந்துள்ளதென்றால் அதற்கு புனிதர்களின் பங்கு இன்றியமையதது.
சின்னப்பர் கூறியது போல
          "உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் "
           தலைவர்களை நினைவுகூறுங்கள். எபிரரேயர்:13-7

நம் புனிதர்கள் பற்றி எழுத வேண்டும் என்ற என் எண்ணம் இங்கு நிறைவேறப்போவதை நினைத்து மகிழ்கிறேன், தமிழில் புனிதர்கள் பற்றிய புத்தகங்கள் இருக்கும் அளவிற்கு வலைத்தளங்கள் இல்லை என்பது உண்மை, எனவே இம் முயற்சியை இறைமகன் இயேசுவின் பெயரால் துவங்குகிறேன்.

    "கடவுள் அருள் கூர்ந்தாலொளிய ஞானம் எனக்கு கிட்டாதெனக்கண்டேன்"
                                                                                                    ஞான ஆகமம்:8-21